விழுப்புரம் அருகே பரபரப்பு... நண்பன் வீட்டிற்கு படிக்க சென்று கைவரிசையை காண்பித்த இளைஞர்...



Young man aboused 26 gram gold in his friend house

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் பகுதியை சேர்ந்தவர் ஐயனாரப்பன். இவரது மகன் ஐயப்பன் திண்டிவனம் பகுதியில்‌ உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று ஐயப்பன் தனது நண்பரான கவுதம் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் ஒன்றாக படித்து வந்துள்ளனர்.

கவுதம், ஐயப்பன் வீட்டில் படித்து விட்டு சென்ற சில மணி நேரத்திலேயே ஐயப்பனின் தந்தை ஒலக்கூர் காவல் நிலையத்தில் தனது வீட்டில் இருந்த 26 கிராம் தங்கம் காணாமல் போனதாக புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் ஐயனாரப்பன் தனது மகனின் நண்பன் கவுதம் வீட்டிற்கு வந்து சென்ற பிறகு தான் நகைகள் காணாமல் போனதாகவும் கூறியுள்ளார். 

அதனையடுத்து போலீசார் திண்டிவனம் அரசு கல்லூரி விடுதியில் தங்கி பயிலும் கவுதமிடம் விசாரணை நடத்தியுள்ளனர். முதலில் திருடியதை கூறாமல் பொய் கூறி வந்த கவுதமிடம் போலீசார் அதிரடியான விசாரணை செய்ததில் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார் கவுதம். பின்னர் அவரிடமிருந்த நகையை போலீசார் பறிமுதல் செய்து ஐயனாரப்பனிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.