மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது!
தேனி அருகே கல்லூரி மாணவியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவில் குடியிருக்கும் உறவினர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்கு உதவியாக தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மாணவியின் உறவினரான ஜீவானந்தம் என்பவர் உடன் நெருங்கி பழகியுள்ளார். இதனிடையே இவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனையடுத்து மாணவியை கழட்டி விட முடிவு செய்த இளைஞர், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனிடையே மாணவ கர்ப்பமாகிய நிலையில், தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜீவானந்தத்தை கைது செய்துள்ளனர்.