மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏடிஎம்-ல் முதியவருக்கு பணம் எடுக்க உதவுவதாக கூறி இளைஞர் செய்த காரியம்.! பதறிப்போன முதியவர்.! அதிர்ச்சி சம்பவம்.!
கடலூர் மாவட்டம் காட்டுமையிலூர் கிராமத்தை சேர்ந்த சாமிதுரை என்ற முதியவர் பணம் எடுப்பதற்காக வேப்பூர் கூட்டு ரோட்டில் உள்ள தனியார் ஏடிஎம்-க்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு முன்னதாக ஒரு இளைஞர் பணம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
அந்த இளைஞர் பணம் எடுத்தபிறகு, தனக்கு பின்புறம் பணம் எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த முதியவரிடம் உங்களுக்கு பணம் எடுக்க நான் உதவுகிறேன் என கூறி ஏடிஎம் கார்டை வாங்கி கொண்டு அவருடைய ஏடிஎம் ரகசிய எண்களை தெரிந்துகொண்டு அந்த முதியவரிடம் இந்த ஏடிஎம்மில் பணம் வரவில்லை வேறு ஏடிஎம்-க்கு தான் செல்லவேண்டும். நானும் அங்குதான் போகிறேன்.. நீங்களும் வாருங்கள் என கூறியுள்ளார்.
இதனையடுத்து அந்த இளைஞர் அவருடைய இரு சக்கர வாகனத்தில் முதியவரை ஏற்றிக்கொண்டு வேப்பூர் கனரா பேங்க் அருகில் இறக்கிவிட்டு உடனடியாக அங்கிருந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞர் வேறொரு ஏடிஎம் சென்று, அங்கு முதியவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூபாய் 10,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளார்.
சிறிதுநேரம் களைத்து இதனை உணர்ந்த அந்த முதியவர், காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏடிஎம்மில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோக்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.