மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பேச மறுத்த காதலி... ஆத்திரத்தில் காதலன் செய்த வெறிச்செயல்... காவல்துறை விசாரணை.!
நாகப்பட்டினம் அருகே ஆறு வருட காதலி பேச மறுத்ததால் காதலன் அந்தப் பெண்ணை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் ஏனங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கமலாபதி. இவரது மகள் ஜெயஸ்ரீ அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக ஆக பணியாற்றி வருகிறார் இவரும் மருங்கூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியன மணிகண்டன் என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு ஜெயஸ்ரீ வீட்டில் எதிர்ப்பு இருந்திருக்கிறது இதனைத் தொடர்ந்து மணிகண்டனுடன் அவர் பேசக்கூடாது என ஜெயஸ்ரீயின் பெற்றோர் வலியுறுத்தி இருக்கின்றனர்.
இதனால் மணிகண்டனுடன் பேசுவதை தவிர்த்து வந்திருக்கிறார் ஜெயஸ்ரீ. இந்நிலையில் அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று கெஞ்சி இருக்கிறார் இதனைத் தொடர்ந்து ஜெயஸ்ரீ மணிகண்டன் உடன் சென்றுள்ளார். அப்போது காதலியின் மீது ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயஸ்ரீயை மீட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் . மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஜெயஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.