மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை கைவிட வற்புறுத்திய ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை.. இளைஞர் கைது.!
நாகையில் காதலை கைவிட வற்புறுத்திய ஆசிரியயை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருமருகல் அருகே தேப்பிராமங்கலத்தை சேர்ந்தவர் கமலபதி. இவருடைய 24 வயது மகள் ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்துள்ளார்.
இவர் மருங்கூர்சத்திரம் பகுதியை சேர்ந்த தங்கராசு மகன் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் ஜெயஸ்ரீ வீட்டுக்கு தெரிய வந்ததால் பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இதனையடுத்து ஆசிரியயை மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் நேற்று பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிய ஆசிரியை ஜெயஸ்ரீயை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் திருமருகல் பேருந்து நிலையம் அருகே அழைத்துச் சென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயஸ்ரீயின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.இதில் ஆசிரியை கத்தி கூச்சலிட மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இதில் படுகாயம் அடைந்த ஜெயஸ்ரீயை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.