மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவமே.. நண்பர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை... காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் காரணம்.!
நெல்லை மாவட்டம் பழவூரைச் சார்ந்த அஜித் என்று நபர் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்களாலே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது . இது தொடர்பாக காவல்துறையின் அரு தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பழவூரைச் சார்ந்த ஐயப்பன் என்பவரது மகன் அஜித்(25). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அஜித்திற்கு நண்பர்கள் வட்டம் அதிகம் என்று கூறப்படுகிறது. மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டு இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் அஜித் தனது நண்பர்களுடன் பழவூர் பெரியகுளம் அருகே உள்ள புது காலனி பகுதியில் மது அருந்தி இருக்கிறார்.
அப்போது நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அவரது நண்பர்கள் அஜித்தை அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் பயங்கரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று இருக்கின்றனர். இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அஜித்தின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் உன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அவருடைய நண்பர்களுக்கும் அஜித்திற்கும் இடையே இருந்த முன்விரோதத்தில் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நீயே ஆயுதங்களுடன் வந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஒரு சிலரை கைது செய்து காவல் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.