#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி... காதலியின் தந்தை செய்த கொடூர செயல்.!
கோவையில் காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற காதலனை காதலியின் தந்தையும் அவரது உறவினரும் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் மயிலாடும்பாறை பகுதியைச் சேர்ந்த மகாதேவன் என்பவரது மகளை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர் உறுதி அளித்திருந்தனர்.
இந்நிலையில் காதலியின் பிறந்தநாள் நேற்று வந்திருக்கிறது. இதற்காக தனது காதலிக்கு வாழ்த்து சொல்ல பிரசாந்த் அவரது நண்பருடன் குடிபோதையில் காதலியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது மகா தேவனுக்கும் பிரசாந்திக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகாதேவனும் அவரது உறவினர் விக்னேஷ் என்பவரும் சேர்ந்து பிரசாந்தை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த காவல்துறை கொலை செய்யப்பட்ட பிரசாந்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து காதலியின் தந்தை மகாதேவன் மற்றும் அவரது உறவினர் விக்னேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.