திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மது போதையில் மாடியில் இருந்து குதித்த வாலிபர்.. உயர் மின்னழுத்தத்தில் சிக்கி பலியான பரிதாபம்.!
தாம்பரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டின் மாடியில் இருந்து குதித்த இளைஞர் உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தாம்பரம் மேற்கு பகுதியில் உள்ள மாந்தோப்பு சிவராஜ் தெருவை சேர்ந்தவர் எட்வின் பாபு இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியினருக்கு டேவிட் மற்றும் டேனியல் என்று இரண்டு மகன்கள். இவர்களின் இளைய மகனான டேனியல்(23) கார்பெண்டர் ஆக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது அண்ணன் டேவிட் தாயுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த டேனியல் தாயுடன் ஏன் சண்டை போடுகிறாய் என அண்ணன் மீது கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் தனது நண்பரான மணிகண்டன் என்பவரது வீட்டிற்கு சென்று மது அருந்தி இருக்கிறார். அதன் பிறகு திடீரென மதுபோதையில் அவரது வீட்டு மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது மணிகண்டனின் வீட்டை ஒட்டி சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கி இருக்கிறார். இதனைப் பார்த்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார வாரியம் மற்றும் தீயணைப்புத்துறைக்கும் தகவல் கொடுத்தனர்.
மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்ததும் தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு முதலுதவி அளித்தனர். ஆனால் டேனியல் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.