மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசை ஆசையாய் காதலித்த இளம் பெண்: வரதட்சணை கேட்டு தற்கொலைக்கு தூண்டிய காதலன் குடும்பத்தார்..! காதல் திருமண பரிதாபங்கள்..!
7 வருடம் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சு.ஆண்டாபாட்டு பகுதியை சேர்ந்தவர் புஷ்பா. இவர் செங்கம் அடுத்த பெரியகஸ்தம்பாடி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள்ளார். இவர்கள் இருவருன் வீட்டாரின் சம்மதம் கிடைத்ததால், இவர்களது பெற்றோர்களின் ஆசியோடு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.
இதன் பின்னர், தம்பதியினர் இருவரும் விவேகானந்தனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். விவேகானந்தன் வரதட்சணை கேட்டு சண்டை போட்டு கொடுமைப்படுத்தி வருவதாக புஷ்பா தனது தங்கை விஜயலக்ஷ்மியிடம் பலமுறை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றும் விவேகானந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு புஷ்பாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மனமுடைந்த புஷ்பா, தனது கணவர் விவேகானந்தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விவேகானந்தன் குடும்பத்தினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த புஷ்பாவின் உறவினர்கள், அவரது மரணத்திற்கு காரணமான விவேகானந்தன் மற்றும் அவரின் குடும்பத்தினரை கைது செய்ய கோரியும், அவரது மரணம் தற்கொலையா அல்லது கொலையா என காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளியை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதியளித்த பின்பு அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.