மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டை... காவல்துறை விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை.!
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இளம் பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த வலசை பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் அமைந்திருக்கும் கிணற்றில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சாக்கு முட்டை ஒன்று மிதந்து இருக்கிறது. அதிலிருந்து அதிகமான துர்நாற்றம் வீசவே அதிர்ச்சி அடைந்த வேலை செய்யும் பெண்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரை வரவழைத்து கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை மீட்டனர். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே அழுகிய நிலையில் 25 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக இருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்தப் பெண் கொலை செய்யப்பட்டாரா.? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா.? என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.