மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவையில் பயங்கரம்... பெண் ஜிம் பயிற்சியாளர் படுகொலை... காதலன் வெறி செயல்.!!
கோவையில பெண் ஜிம் பயிற்சியாளர் காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தனியார் தங்கும் விடுதி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சரவணன் என்ற இளைஞரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் ஜோடி
கோவை சின்னியம்பாளையம் ஆர்ஜி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(29). இவர் கோவை எஸ்எஸ் குளம் அருகே உள்ள கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கீதா(26) என்ற பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். கீதா, மகளிர் விடுதியில் தங்கி இருந்து கோவையில் உள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார். கீதா, சரவணனுக்கு தங்கை உறவுமுறை என்பதால் இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு நிலவி வந்திருக்கிறது.
ரகசிய திருமணம்
இதனைத் தொடர்ந்து கீதா மற்றும் சரவணன் இருவரும் ரகசியமாக திருமணம் செய்துள்ளனர். மேலும் இவர்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் இரு விட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதையும் படிங்க: #Breaking: திமுக பிரமுகர் அடித்துக் கொலை?.. இரத்த வெள்ளத்துடன் மீட்கப்பட்ட சடலம்.. குடும்பத்தினர் சோகம்.!
விடுதியில் நடந்த கொடூர கொலை
கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சரவணன் மற்றும் கீதா ஆகியோர் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். அப்போது சரவணன் மற்றும் கீதா இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கீதாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சரவணன், கீதாவை கடுமையாக தாக்கி அவரது தலையை சுவற்றில் மோதி இருக்கிறார். இதில் படுகாயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் அறையிலிருந்து வேகமாக வெளியேறி தப்பிச் சென்றுள்ளார்.
கைது செய்த காவல்துறை
சரவணன் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அவர் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது கீதா உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விடுதி ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த சரவணனை கைது செய்து விசாரித்ததில் கீதாவை கொலை செய்ததை காவல்துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி... பிளேடால் வெட்டிய 67 வயது கணவன்.!!