மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் ரயிலில் தேவையில்லாத தகராறு... சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம்பெண்.! கதறித்துடித்த பெற்றோர்.!
ஓடும் ரயிலில் தந்தை அடிவாங்கும் காட்சியை கண்டு அதிர்ச்சியில் கீழே சுருண்டு விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் காமாட்சி ராஜன். இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு 3 வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் திருமணம் முடிந்த தனது தங்கையை மறுவீட்டுக்கு அழைத்து வருவதற்காக மகேஸ்வரி தனது தந்தை அண்ணாமலை, தாய் கல்யாணி ஆகியோருடன் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து ரயிலில் பயணித்துள்ளனர்.
அப்போது அவர்கள் சென்ற ரயில், செங்கல்பட்டு ரயில்நிலையம் வந்ததும், அந்த பெட்டியில் 4 பேர் எறியுள்ளனர். அதில் ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட மேல் இருக்கையில் அமராமல், மகேஸ்வரி தந்தை அண்ணாமலை இருந்த கீழ் இருக்கைக்கு அருகில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த ரயில் விழுப்புரம் வந்ததும், அந்த மேல் இருக்கைக்கு அவருடன் வந்த 3 பேரில் ஒருவர் சென்று படுத்துள்ளார்.
இதனைப்பார்த்த அண்ணாமலை உங்கள் இருக்கையில் உங்களுடன் வந்த நபர் ஏறி விட்டார். எனவே எனது இருக்கையை விட்டு எழுந்து செல்லுங்கள். நாங்கள் சாப்பிட போகிறோம் என்று கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் செல்ல முடியாது என்று அண்ணாமலையிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றியது.
இதனையடுத்து ஆண்ணாமலையின் மகள் மகேஸ்வரி, அந்த நபரை தட்டிக்கேட்டுள்ளார். ஆனாலும் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி அந்த நபர், அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. தனது தந்தை தாக்கப்படுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து மகேஸ்வரியை அவரது தாய் தந்தை இருவரும் எழுப்பினர். ஆனால் அவர் மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.
இந்தநிலையில், அந்த ரயில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்துக்கு வந்தது. ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்ததால் ஆம்புலன்ஸ் வாகனம் தயாராக இருந்தது. அந்த ஆம்புலன்சில் மகேஸ்வரியை ஏற்றி சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள்,மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்ட மகேஸ்வரியின் தாய் தந்தை இருவரும் கதறி அழுதனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.