மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணமான 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்.! என்ன காரணம்.?
சென்னையில் திருமணமான நான்கே நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொரட்டூர், அக்ரகாரம், எல்லையம்மன் நகரைச் சேர்ந்த சந்தியா என்பவருக்கும், அவருடய உறவுக்காரரான ராஜா என்பவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்று கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த திருமணத்தில் சந்தியாவுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த சந்தியா திருமணமான 4வது நாளில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தியாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான நான்கு நாளில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.