மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் கணவர், மாமியாருடன் ஏற்பட்ட தகராறு... பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்.!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் - ரஞ்சிதா தம்பதியினர். இருவருக்கும் காதல் திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆன நிலையில் 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் திடீரென கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக ரஞ்சிதா மன உளைச்சலில் இருந்துள்ளார். மன உளைச்சல் அதிகமாகவே ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்து காவல் துறையினர் ரஞ்சிதாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.