மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தையே பிறக்காதா?.. திருமணமாகி 8 மாதத்தில் இளைஞர் தற்கொலை..! விரக்தியில் பறிபோன உயிர்..!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்தாண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் ஆனந்தவள்ளி என்ற பெண்ணோடு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணம் முடிந்து 8 மாதங்கள் ஆகிய நிலையில், ஆனந்தவல்லி கர்ப்பமாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தனக்கு வாரிசு இல்லாமல் போய்விடுமோ? என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஜனார்த்தனன் ஒரு கட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல சுற்றிவந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் ஜனார்த்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையில் அவர் குழந்தை இல்லை என்பதால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.