#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கஞ்சா விற்பதில் தகராறு... இளைஞர் வெட்டி படுகொலை... வெளியான அதிர வைக்கும் பின்னணி.!
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக மூன்று பேரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை அடுத்த தண்டுமாநகர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்(25). இவர் சம்பவம் நடந்த தினத்தன்று வீட்டிலிருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு சடலமாக கடந்து இருக்கிறார் பிரவீன். இதனைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை பிரவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. மேலும் காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பான மோதலில் பிரவீன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிய வந்திருக்கிறது.
மேலும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா விற்பனை தொடர்பாக பெரியபாளையத்தைச் சார்ந்த ஒருவரிடம் மூன்று பேர் மாமூல் கேட்ட விவகாரத்தில் பிரவீன் தலையிட்டதால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது.