தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
#JustIN: மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட மாதேஷ்வரன் வீடியோ விவகாரம்;.. கண்ணீருடன் மாதேஷ் தன்னிலை விளக்கம்.. முழு விபரம் உள்ளே..!
தான் செய்த தவறை உணர்ந்து, இனி ஒரு வாய்ப்பு கிடைத்தால் மக்களுக்காக குரல் கொடுப்பேன் என மாதேஷ் தன்னிலை விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனியார் பத்திரிகைகளில் அரசியல் நிகழ்ச்சி செய்தி ஆசிரியராக பணியாற்றி வந்த மதன் ரவிச்சந்திரன், யூடியூப் சேனல் தொடங்கி பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி ராகவன் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த விடியோவுக்கு பின்னர் அவர் பத்திரிகை துறையில் பணியாற்றாமல் இருந்த நிலையில், தற்போது Mars Tamilnadu என்ற யூடியூப் சேனல் தொடங்கி பாஜக அண்ணாமலை, பணம் வாங்கிக்கொண்டு நடுநிலையாளர்கள் என பேசியதாக கூறப்படும் சில யூடியூபர்கள் என பல விடீயோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோவில் இடம்பெற்ற யூடியூப் சேனல் செய்தியாளர் மாதேஸ்வரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில், மாதேஷின் தன்னிலை விளக்கம் என்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் அவர் பேசுகையில், "அனைவர்க்கும் வணக்கம். கடந்த 5 நாட்களாக நீங்கள் பார்த்த வீடியோவில் இருப்பது நான் தான். கடந்த ஆண்டு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற நிகழ்வு இது. நான் அலுவலகத்தில் வழக்கம்போல பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, நண்பரான மற்றொரு ஊடகத்தை சேர்ந்தவரிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவர் தமிழகத்தில் உள்ள முக்கியமான ஊடகவியலாளர்களை சந்திக்க ஒருவர் வந்திருக்கிறார்கள். அவர்களிடையே நாங்கள் அறிமுகம் ஆனோம். அவர்கள் 2024 தேர்தலுக்கு வேலை செய்யப்போகிறோம் என கூறினார்கள். நாங்கள் அனைவரும் பேசி முடித்துவிட்டு, நீங்கள் வந்து சென்றதுக்கு பணம் வைத்துக்கொள்ளுங்கள் என கூறினார்கள். அதனாலேயே அந்த பணத்தை பெற்றேன். எனக்கு அதன் உள்நோக்கம் தெரியவில்லை.
கடந்த 5 நாட்களாக நான் வீட்டிலேயே இருக்கிறேன். என்னால் இந்த சூழ்நிலையை இன்று வரை புரிந்துகொள்ள இயலவில்லை. எனது குடும்பமே உருக்குலைந்து போய்விட்டது. எனது மனைவி, அப்பா, அம்மா என அனைவரும் உடைந்துவிட்டார்கள். நானும் என் 2 வயது மகனுடன் விளையாட இயலாமல் உடைந்துவிட்டேன். என்னால் என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் சூழ்நிலை கைதியாக மாறிவிட்டேன்.
எனது குடும்பத்தினர் என்னை நம்பினார்கள். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். எனது ஆதன் நிர்வாகம் பலவற்றை சொல்லி கொடுத்தது. நான் ஆதனில் இருந்து வளர்ந்து வந்தபோது, அவர்கள் என்னிடம் இவை போன்ற நபர்கள் குறித்து எச்சரிக்கப்பவில்லை. மதன் ரவிச்சந்திரன் குறித்தும், அவர்கள் அம்மா & அப்பா குறித்து பேசியது தவறுதான். நான் அப்படி பேசியிருக்க கூடாது. எனக்கும் அம்மா - அப்பா இருக்கிறார்கள். அவரது பெற்றோரும் எனக்கு அப்பா-அம்மா போலத்தான்.
அதேபோல, பல அரசியல் தலைவர்கள் குறித்து பேசியிருக்கிறேன். நான் அங்கு சிலவற்றை அதிகப்படுத்தி சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு தலைவர்கள் குறித்தும் பல கருத்துக்களை தெரிவித்து இருக்கிறேன். இதில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறேன் என தெரியவில்லை. நான் மக்களிடம் மிகப்பெரிய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். எனக்கு இப்படி நடக்கும் என தெரியாது.
நான் அனைவரிடமும் இயல்பாக பேசுவதை போல பேசினேன். என்னை மக்கள் சந்தித்தால் நன்றாக பேசுவார்கள். அந்த இடத்தை நான் இழந்துவிட்டேன். கடந்த 5 நாட்களாக நான் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொண்டேன். எனக்கு ஒருவேளை நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தால், எனது தவறில் இருந்து மாறி நல்ல பெயர் எடுப்பேன். தூக்கி விட ஆட்கள் இல்லாததை போல கைஉடைந்து இருக்கிறேன்.
எனது மகன் 15 ஆண்டுகள் கழித்து யூடியூபில் என்னைப்பற்றி தேடினால், எனது தந்தை தவறானவர் என பார்க்க கூடாது. அதற்காகவே நான் போராடுகிறேன். அதற்கு வாய்ப்பு இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். நடக்குமா என தெரியவில்லை?. தொடர்ந்து போராடி வருகிறேன். அனைவருக்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.