#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பேராபத்து... கொரோனாவை தொடர்ந்து பரவுகிறது ஜிகா வைரஸ்.. 7 வயது சிறுமிக்கு உறுதி..!
உண்டு உறைவிட பள்ளியில் தங்கியிருந்து பயின்று வரும் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில், ஜிகா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் உள்ள பாலகர் மாவட்டம், தலசாரியில் பழங்குடியின மாணவிகளுக்கான உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த உறைவிட பள்ளியில் தங்கி பயின்று வரும் 7 வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியாகிஉள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புனேவை பொறுத்தமட்டில் கடந்த 2021-ல் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டது. மீண்டும் சிறுமிக்கு உறுதியாகியுள்ளது.
ஏற்கனவே இந்திய அளவில் கொரோனா மீண்டும் பரவ தொடங்குவது பலரிடமும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜிகா வைரஸின் தாக்கம் தென்பட தொடங்கியுள்ளது மழைக்கால நோய்களை உறுதி செய்துள்ளது. இதனால் கொரோனாவை தொடர்ந்து மழைக்கால நோய்களுக்கான தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.