வச்சாம்பாரு ஆப்பு எனக்கு.. ரீசார்ஜ் கட்டணங்கள் விலை உயர்வு?.! புத்தாண்டு பரிசாக ஷாக் நியூஸ்.!!



Airtel and jio recharge bill has increased

 

செல்போன் நெட்வொர்க் சேவைகளுக்கு இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, ஐடியா உட்பட பல்வேறு நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. தற்போது இந்தியாவில் 5g நெட்வொர்க் அமைப்பு பல நகரங்களில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5ஜி சேவை வழங்குவதால் அதிகரிக்கும் செலவுகளை சமாளிப்பதற்கு, ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இருப்பதாக தகவலானது வெளியாகி இருக்கிறது.

Latest news

வரும் 2024-ம் ஆண்டில் இது தொடர்பான அறிவிப்பானது வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமையில் பலரும் 4g நெட்வொர்க் வசதி உபயோகித்தாலும், 5g இன்னும் கூடுதல் வேகத்துடன் இருப்பதால் விரும்பப்பட்டு வருகிறது. 

இந்த சேவையை வழங்குவதற்கு ஆகியுள்ள செலவுகளை கருத்தில் கொண்டு தொலைதொடர்பு நிறுவனங்கள் தற்போது தனது கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.