3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
ஏர்டெல், வோடாஃபோன், ஜியோ-வின் அதிரடி விலை உயர்வு! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தொலைத்தொடர்பு துறையில் மிக பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தி முன்னணி நிறுவனங்களை திண்டாட வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இன்டர்நெட், போன் கால், SMS என அனைத்தையும் இலவசமாக கொடுத்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது.
பலவருடமாக ஆதிக்கம் செலுத்திவந்த பல்வேறு நிறுவனங்கள் ஜியோவின் வளர்ச்சியால் ஓரங்கட்டப்பட்டது. சில நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. மக்களுக்கு குறைந்த செலவில் அதிக இன்டர்நெட்டை வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். இதனையடுத்து அணைத்து நிறுவனங்களும் கட்டணத்தொகையை குறைத்தது.
இந்தநிலையில், தங்கள் அனைத்து சேவைகளின் கட்டணங்களை உயர்த்துவதாக ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் அறிவித்தன. அதேபோல தாங்களும் கட்டணங்களை உயர்த்துவதாக ஜியோவும் அறிவித்தது.
ஏர்டெல் நிறுவனத்தின், டேட்டா மற்றும் கால் செய்யும் அன்லிமிடெட் திட்டத்தில் 28 நாட்களுக்கான கட்டணத்தை 129 ரூபாயிலிருந்து 148 ரூபாயாக உயர்த்தியுள்ளது. அதேபோல் ஓர் வருட திட்டம் 1699 ரூபாயிலிருந்து 2398 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல வோடஃபோன் நிறுவனம் 28 நாட்களுக்கான கட்டணத்தை 179 ரூபாயிலிருந்து 299 ரூபாயாகவும், ஒருவருட கட்டணத்தை 1699 ரூபாயிலிருந்து 2399 ரூபாயாக உயர்த்திள்ளது. அதேபோல ஜியோ நிறுவனமும் 40 விழுக்காடு வரை கட்டணங்களை உயர்த்தப்படும் என அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தி வெளியானதிலிருந்து பொதுமக்கள் சற்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.