முகநூலில் வரும் மோசடி லிங்குகள்; ஏமாந்துவிடாதீங்க மக்கா.! விபரம் உள்ளே.!



Facebook Scam Link Alert 

 

சமீபகாலமாகவே முகநூல் உட்பட பல்வேறு சமூக வலைத்தளங்களில், ஆன்லைன் பங்குச்சந்தை முதலீடு தொடர்பாக பல்வேறு விளம்பரங்கள் வருகின்றன. இதனை நம்பி முதலீடு செய்யும் நபர்களிடம் போலியான வாக்குறுதியை கொடுத்து இலட்சக்கணக்கில் பணம் சுருட்டப்பட்டு வருகிறது. 

30 முதல் 50 வயதுக்குள் இருப்போரை குறிவைத்து, வார்த்தைகளில் ஜாலம் காண்பித்து அரங்கேறும் இவ்வகை மோசடி ஒவ்வொரு மாநில வாரியாகவும் தொடருகிறது. இன்றளவில் உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, உள்ளூர் மொழிகளிலும் அவை பதிவிடப்படுகின்றன. 

Facebook

இவ்வாறாக தங்களின் வலைகளில் சிக்குவோரை தனித்தனியே பேசி, பின் வாட்ஸப்பில் இணைந்து மோசடிகளை அரங்கேற்றுகின்றனர். பணம் பறிபோன பின்னரே அவர்களுக்கு தாங்கள் ஏமாற்றப்பட்டது உணரப்படுகிறது. இதனால் மோசடியாக, சந்தேகத்திற்குரிய வகையில் அனுப்பப்படும் எந்த ஒரு லிங்கையும் நாம் அணுகாமல் இருப்பது நல்லது. 

இவ்வாறான மோசடி லிங்குகள் பெறப்பட்டால், உடனடியாக அதனை புகார் அளிக்க வேண்டும். பணத்தை இழந்தோர், பணம் இழந்த 24 மணிநேரத்திற்குள் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் பணம் மீட்கப்படும் வாய்ப்புகளும் அதிகம்.