ஹேக் செய்த மாணவருக்கு சன்மானமா? இன்ஸ்டாகிராம் நிறுவனம் அளித்த கௌரவம்!! ஏன் தெரியுமா?
ஹேக்கர்ஸ் என்றாலே வலைதளத்திற்குள் சென்று தகவல்களை திருடுபவர்கள் என பலரும் எண்ணி வருகின்றனர். மேலும் அதனால் ஹேக்கிங் என்றாலே பலரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் ஹேங்கிங்கிலேயே அனுமதி பெற்ற ஹேக்கிங் என்ற ஒரு வகை உள்ளது. அதன் மூலம் சமூக வலைதள நிறுவனங்கள் குறிப்பிட்ட நபர் ஒருவருக்கு வலைத்தளத்தை ஹேக் செய்ய அனுமதி வழங்குவர். அதன் மூலம் எந்த காரணத்தினால் அந்த வலைதளம் ஹேக் செய்யப்பட்டது என்பதை கண்டறிந்து குறிப்பிட்ட நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பார்.
அதனை தொடர்ந்து குறிப்பிட்ட வலைதளம் ஹேக் செய்வதற்கான கோளாறுகளை கண்டுபிடித்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வலைதளம் லக்ஷ்மன் முத்தையா என்ற ஐடி மாணவருக்கு தங்களது வலைத்தளத்தை ஹேக் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அந்த மாணவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே ஹேக் செய்துள்ளார் .மேலும் இதற்கு பாஸ்வேர்ட் மறந்தவர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்தான் காரணமாக இருந்துள்ளது என்பதை கண்டறிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் அளித்த தகவலின்படி, குற்ற செயலில் ஈடுபடும் ஹேக்கர்கள் இணையதளத்தை ஹேக் செய்ய முடியாதபடி இன்ஸ்டாகிராம் நிறுவனம் சரி செய்தனர். இந்நிலையில் தனது வலைத்தளத்தை ஹேக் செய்த லக்ஷ்மன் முத்தையா என்ற மாணவனை பாராட்டி. இன்ஸ்டாகிராம் நிறுவனம் அவருக்கு 30 ஆயிரம் டாலர்கள் சன்மானமாக வழங்கியுள்ளது அதாவது இந்திய மதிப்பின்படி 20 லட்சத்து 65 ஆயிரத்து இருநூறு ரூபாயை பரிசாக அளித்து உள்ளது.