#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விரைவில் வாட்சாப் குரூப்பிற்கு புதிய கட்டுப்பாடு; "அப்பாடா, இனியாவது நிம்மதியா இருக்கலாம்!"
வாட்சப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வாட்சப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியதிலிருந்து வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் பேஸ்புக் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதிய புதிய வசதிகளை உருவாக்கித் தருவது தான்.
வாட்ஸ் அப்பில் உள்ள வசதிகளில் மிகவும் முக்கியமானது வாட்சப் குரூப். இந்த வசதியின் மூலம் நாம் ஒரே நேரத்தில் பலருடன் பேசுவதுடன் ஒரு தகவலை ஒரே சமயத்தில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த வசதியானது பலசமயங்களில் பலருக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதேசமயம் பல தேவையற்ற தகவல்களை குரூப்களில் பகிர்வதன் மூலம் சில சமயங்களில் எரிச்சலாகவும் இருந்து வருகிறது. அதைவிட கொடுமையானது நமக்கு சம்பந்தமே இல்லாத ஒரு whatsapp குரூப்பில் நாம் இருந்து வருவதுதான். இதற்கு காரணம் யாரென்று தெரியாதவர்கள் கூட நம்மை வாட்ஸ் அப் குரூப்களில் இணைக்கும் வசதி தற்பொழுது நடைமுறையில் இருந்து வரும் வருவது.
தற்பொழுது இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக whatsapp நிறுவனம் புதிய வசதியினை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதியானது தற்பொழுது ஆப்பிள் போன்களில் பீட்டா வெர்ஷன் மூலம் சோதனைக்கு விடப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியானது ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்களுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வசதியின் மூலம் ஒரு நபர் தன்னை யார் யாரால் வாட்ஸ்அப் குரூப்களில் இணைக்க முடியும் என்பதை தீர்மானிக்கலாம். இந்த வசதியானது செட்டிங்ஸ்->அக்கவுண்ட்->ப்ரைவசி->குரூப்ஸ் என்ற இடத்தில் தரப்பட உள்ளது அங்கு மூன்று விதமான.
இந்த இடத்தில் மூன்று வகையான options தரப்பட உள்ளது. முதலாவது Everyone: இதனை தேர்வு செய்தால் யார் வேண்டுமானாலும் நம்மை இந்த whatsapp குரூப்பில் இணைக்க முடியும்; இரண்டாவது Contacts: இதனை தேர்வு செய்தால் நமது காண்ட்ராக்டில் உள்ள நபர்களால் மட்டுமே எந்த ஒரு whatsapp குரூப்பிலும் நம்மை இணைக்க முடியும். மூன்றாவது Nobody: இதனை தேர்வு செய்தால் நம்மை ஒருவர் whatsapp குரூப்பில் இணைப்பதற்கு முன்பு நமக்கு ஒரு இன்விடேஷன் வரும். அதற்கு நாம் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அந்த நபரால் நம்மை ஒரு குறிப்பிட்ட whatsapp குரூப்பில் இணைக்க முடியும்.
எனவே இத்தகைய வசதியானது அறிமுகப்படுத்தப்பட்ட பின் தேவையில்லாத வாட்ஸ்அப் குரூப்களில் நம்மை மற்றவர்கள் இணைக்க முடியாது. நம்முடைய அனுமதி பெற்று தான் அவர்களால் இணைக்க முடியும்.