இரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நண்பர்களுக்கு நேர்ந்த சம்பவம்; மின்சாரம் தாக்கி மூர்ச்சையானதால் பகீர்.!



Railway track Electrical Attack Video 

இந்தியாவில் மிகப்பெரிய நிர்வாகத்துறையான இரயில்வே, தற்போது படிப்படியாக நவீனமயமாகி வருகிறது. நீராவி, நிலக்கரி, டீசல், மின்சாரம் என இரயில் என்ஜின்களும், அதன் கட்டமைப்புகளும் புதுமை கண்டு வருகின்றனன.

அதேநேரத்தில் பயணிகளின் விரைந்த போக்குவரத்து, மாநகரங்களில் துரித இரயில் சேவை மெட்ரோ, புல்லட், வந்தே பாரத் ஆகியவற்றை ஊக்குவிக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில், மேலை நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இரயில்வே நிர்வாகம் நவீனமயமாகிவிட்டது.

இதனால் அங்கு பயணிகள் மற்றும் இரயில் சேவை பாதுகாப்புக்கு என பலவழிமுறைகள் இருக்கின்றன. இதனிடையே, தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த நண்பர்களில் இருவரின் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சில ஆண்டுகள் ஆகிவிட்டது எனினும், தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

தண்டவாளத்தின் மீது அமர்ந்து இருக்கும் 3 நபர்களில், ஒருவர் கிரீன் லைன் எனப்படும் ஒரு பகுதி தண்டவாளம் மீது எதிர்பாராத விதமாக கைவைத்தார். அப்போது, அதன் அருகில் இருக்கும் அமைப்பில் இருந்து மின்சாரம் பாய்ந்து மூர்ச்சையானார். அவருடன் நெருக்கமாக இருந்த தோழியும் மின்தாக்குதலுக்கு உள்ளாகினர். இதனையடுத்து, இருவரையும் மீட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி செய்தனர். நல்வாய்ப்பாக இவர்கள் உயிர்தப்பிக்கொண்டனர்.