பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்; நேரில் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய டால்பின்கள்.. வைரல் வீடியோ.!



SUnita Williams Welcomed by Dolphins 

சர்வதேச விண்வெளி மையத்துக்கு, நாசாவின் விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களுக்கு முன்னதாக சென்றிருந்தனர். இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் உட்பட 4 அதிகாரிகள் குழு 8 நாட்கள் வேலைக்காக சர்வதேச விண்வெளி மையம் சென்றது. பின் அவர்கள் மீண்டும் வருவதில் தாமதம் நீடித்தது.

இதனால் அவர்களை மீட்டு வர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டி, அவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து மீட்கப்பட்டனர். 8 நாட்கள் பயணத்துக்கு சென்றவர்கள், 275 நாட்கள் நீண்ட போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்தது பால்கான் 9 டிராகன்; பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.!

இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில், விண்வெளி வீரர்கள் குழு பூமிக்கு பத்திரமாக வந்தது. இந்த விஷயம் உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. அவர்கள் பத்திரமாக வர வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்துகொண்டனர். குறிப்பாக இந்திய வம்சாவளி வீரர் சுனிதாவுக்காக ஒட்டுமொத்த இந்தியாவும் பிரார்தித்தது.

இன்று அவர்கள் பத்திரமாக பூமி வந்ததைத்தொடர்ந்து, பலரும் தங்களின் மகிழ்ச்சியை ஏற்படுத்தினர். அவரால் புளோரிடா கடலில் தரையிறங்கியபோது, சில டால்பின்களும் அவர்களை சூழ்ந்துகொண்டு வரவேற்றது. மீட்பு படையினர் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.

இதையும் படிங்க: விண்ணில் பாய்ந்தது பால்கான் 9 டிராகன்; பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.!