மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டிக் டாக்கிற்கு அடுத்த ஆப்பு! அமெரிக்க அதிபரின் அதிரடி!
கடந்த மாதம் இந்திய அரசு டிக் டாக் செயலி உட்பட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதித்தது. நாட்டின் இறையாண்மை மற்றும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் திருட்டு குறித்து இந்திய அரசு இந்த அதிரடி முடிவை மேற்கொண்டது. இதனால் டிக் டாக் செயலியை பயன்படுத்துபவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தியாவின் உத்தரவை அடுத்து அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடை செய்ய பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தது. இதனால் டிக் டாக் நிறுவனத்திற்கு ஏற்பட்டுவரும் தொடர் நெருக்கடி காரணமாக டிக் டாக் நிறுவனம் தனது தலைமை இடத்தை சீனாவில் இருந்து மாற்றி வேறொரு இடத்திற்கு மாறப்போவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
சீன உளவுத் துறையால் டிக் டாக் செயலியில் இருக்கும் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று அமெரிக்க அரசு தரப்பினர் கூறியதைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், டிக் டாக் செயலியைப் பொறுத்தவரை, அதற்கு விரைவில் அமெரிக்காவில் தடை விதிக்கப்படும், மேலும் டிக்டாக்கிற்கு பதிலாக பரந்த அளவில் மாற்றுவழியை யோசித்து கொண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.