தேவையில்லாத வாட்ஸாப் ஸ்டேட்டஸால் தொல்லையா! உங்கள் கவலையை போக்க புதிய அப்டேட்



Whatsapp update to sort whatsapp status

வாட்ஸாப் நிறுவனம் இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வாடிக்கையாளர்களுக்காக வாட்ஸாப் ஸ்டேட்டஸ் என்ற வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயனாளர்கள் தங்கள் ஸ்டேட்டஸில் வைக்க முடியும். 

ஒரு நபர் வைக்கும் ஸ்டேட்டஸினை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அந்த நபரின் எண்ணை பதிவு செய்துகொள்வதன் மூலம் பார்க்கலாம். நமது காண்டாக்டில் உள்ள எந்த நபர் ஸ்டேட்டஸ் வைத்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அந்த ஸ்டேட்டஸ் நமக்கு காண்பிக்கப்படும். 

Whatsapp

தற்பொழுது வாட்ஸாப் ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் அவை வைக்கப்படும் நேரத்தைப் பொறுத்து நமக்கு அடுத்தடுத்து காண்பிக்கும். கடைசியாக வைத்த நபரின் ஸ்டேட்டஸ் நமக்கு முதலில் காணிபிக்கும். இதனால் நமக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வைக்கும் ஸ்டேட்டஸ்கள் கூட முதலில் காண்பிக்கும். 

இந்த வசதியானது சில சமயங்களில் பலருக்கு எரிச்சலை ஏற்படுத்திவிடுகிறது. நமக்கு தேவையானவர்களின் ஸ்டேட்டஸை தேடிப் பாரக்க நேரிடும். வாடிக்கையாளர்களின் இந்த எரிச்சல் உணர்வை போக்க வாட்ஸாப் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. 

Whatsapp

இந்த வசதியானது, ஒரு நபர் யாருடன் அதிகமாக வாடஸாப்பில் பேசுகிறாரோ, யாருடை ஸ்டேட்டஸை அடிக்கடி பார்க்கின்றாரோ போன்ற தகவலைப் பொறுத்து அவர்களின் ஸ்டேட்டஸை முதலில் காண்பிக்கும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. அதன் பிறகு நமக்கு தேவையில்லாதவர்களின் ஸ்டேட்டஸ்கள் கடைசியில் காண்பிக்கப்படும்.