மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே.. இது வயிறா? இல்ல... வயிற்றுவலியால் துடிதுடித்த நபர்! ஸ்கேன் செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
துருக்கியில் வயிற்று வலி என்று சென்ற நபரின் வயிற்றில் இருந்து நூற்றுக்கணக்கான நாணயங்கள் நகங்கள்,பேட்டரிகள், கண்ணாடி துண்டுகள் போன்றவை எடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கியில் 35 வயது நிறைந்த நபர் ஒருவர் கடுமையான வயிற்று வலியால் அவதிபட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவரது சகோதரர் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அந்த நபருக்கு மருத்துவர்கள் எண்டோஸ்கோபி, எக்ஸ்ரே ஆகியவற்றை எடுத்து பார்த்துள்ளனர்.
அதன் முடிவை கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் அந்த நபரின் வயிற்றில் 233 காயின்கள், காந்தம், நகங்கள், கண்ணாடி துண்டுகள், ஸ்க்ரூஸ், கற்கள் என ஏராளமான பொருட்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் வயிற்றில் இருந்த அனைத்து பொருட்களையும் வெளியேற்றியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து மருத்துவர் கூறுகையில், இது மாதிரியான சம்பவங்கள் பெரும்பாலும் குழந்தைகள்,சிறுவர்களிடையேதான் நடக்கும். பெரியவர்களிடையே இதுபோன்ற நிலையை நாங்கள் பார்த்ததில்லை. மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கைதி, குற்றவாளிகள்தான் இதுபோன்ற செயலில் ஈடுபடுவார்கள். இந்த நபர் ஏன் இவ்வாறு செய்தார் என தெரியவில்லை. அவரது வயிற்றில் இருந்த பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு அவர் தற்போது நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.