"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
அமெரிக்காவை புரட்டி போட்ட ஐடா சூறாவளி.! கோரத்தாண்டவத்தால் 42 பேர் பலி.!
சமீபத்தில் மெக்சிக்கோ வளைகுடாவில் உருவான ஐடா சூறாவளி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கரையைக் கடந்துள்ளது. இந்தச் சூறாவளி கரையை கடந்த நேரத்தில் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் இருந்தது. இதன்காரணமாக கரையோரப் பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் ஐடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஐடா சூறாவளி காரணமாக பெய்த கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல நகரங்களின் வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நியூயார்க் நகரில் மட்டும் திடீர் வெள்ளத்தில் சிக்கி, 25 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் ஐடா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 42 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரலாறு காணாத மழை பெய்திருப்பதால், அங்கு நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நியூயார்க் நகரில் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கன மழை, வெள்ளம் காரணமாக நியூயார்க் நகர சுரங்க ரயில் சேவைகள் அனைத்தும் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் நியூயார்க் நகரில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.