மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடப்பாவி.. 1000-க்கும் மேற்பட்ட நாய்களை பட்டினி போட்டுக்கொன்ற 60 வயது நபர்.. நீயெல்லாம் மனுஷனா?..!!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினிபோட்டு கொலை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
தென்கொரியா நாட்டில் உள்ள ஜோங்ஜீ மாகாணத்தை சேர்ந்தவர் தனது வளர்ப்பு நாய் மாயமானதாக காவல்துறையினரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நாயைத் தேடியலைந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபரின் வீட்டில் குவியல் குவியலாக நாய்களின் சடலங்கள் இருப்பதை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அத்துடன் இது குறித்து அவரிடம் விசாரணை செய்தபோது, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நாய்களை எடுத்து வந்து உணவளிக்காமல் கொலை செய்ததாக தெரிவித்தார்.
மேலும் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படும் நாய்கள் வயதான பின் பண்ணை உரிமையாளர்கள் அவற்றை கொலை செய்யும் பொறுப்பை அந்த நபரிடம் ஒப்படைத்ததாகவும், ஒரு நாய்க்கு 800 ரூபாய் வீதம் கொடுத்ததாகவும் விலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுவரையிலும் அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை பட்டினிபோட்டு கொன்றார் என்ற தகவல் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.