53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
கொரோனா எதிரொலி.. 70000 சிறைக் கைதிகளுக்கு தற்காலிக விடுதலை! ஈரானில் அதிரடி அறிவிப்பு
சீனாவிற்கு அடுத்தப்படியாக கோரோனா வைரஸ் பாதிப்பு ஈரானில் அதிகப்படியாக உள்ளது. ஈரானில் இதுவரை கொரோனா வைரஸால் 237 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 43 பேர் பலியாகினர்.
மேலும் ஈரானில் உள்ள ஒரு சில சிறைக் கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இது மேலும் பல சிறைக் கைதிகளை தாக்கும் என்ற அபாயம் அந்நாட்டு அரசின் மத்தியில் எழுந்துள்ளது.
எனவே ஈரான் நாட்டின் சிறையில் கைதிகளாக உள்ள 70000 பேரை தற்காலிகமாக விடுவிக்குமாறு அந்நாட்டு தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர்களால் பொது மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நேராது எனவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும் இந்த கொரோனா வைரஸின் வீரியம் எப்போது குறையும் என்று கணிக்க முடியாததால் விடுதலை செய்யப்படும் சிறைக் கைதிகள் மீண்டும் சிறைக்கு எப்போது திரும்ப வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.