திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ராட்சச நிலச்சரிவு.! மண்ணோடு மண்ணாக புதைந்த கட்டிடங்கள்.! 8 பேர் பரிதாப பலி!!
இத்தாலி நாட்டிற்கு சொந்தமான வ
இஷியா தீவில் இரு நாட்களாக பயங்கரமான மழை கொட்டி தீர்த்துவருகிறது. இதனால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதில் வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் மண்ணோடு புதைந்துள்ளது.
அந்த கட்டிடங்களில் உள்ள பலரும் ராட்சச நிலச்சரிவில் சிக்கினர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர்கள் அங்கு விரைந்து நிலச்சரிவில் சிக்கிய மக்களை காப்பாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் பெண்கள், சிறுவர்கள் உட்பட பலரைக் காணவில்லை எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மீட்புக்குழு காணாமல் போனவர்களை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் புயல் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக தங்கி இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.