மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடு ரோட்டில் கவிழ்ந்த டேங்கர் லாரி!,, டீசல் பிடிக்க குவிந்த மக்கள்: திடீரென வெடித்ததால் 9 பேர் பலி 70 பேர் படுகாயம்..!
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியா நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள பென்ட் பய்யா என்னும் நகரில் டேங்கர் லாரி ஒன்று டீசல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டீசல் லாரி நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து டோங்கர் லாரியில் இருந்து டீசல் சாலையில் கொட்டியது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் வரவிருந்த ஆபத்தை உணராமல் டீசலை சேகரிக்க போட்டி போட்டுக் கொண்டு அங்கு குவிந்தனர். இந்த நிலையில், கவிழ்ந்துகிடந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் டீசல் ஏற்றி வந்த லாரியும், அதனை சுற்றி சாலையில் நின்ற ஏராளமான வாகனங்களும் தீக்கிரையாகின.
மேலும், இந்த தீ விபத்திக் சிக்கி 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 70 க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று கூறப்ப்டுகிறது.