அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அதிர்ச்சி.! சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி.! ஆய்வில் வெளியான புதிய தகவல்!
தென் கொரியா நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தவர்களில் 91 பேருக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவந்த நிலையில், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை காண்பித்தது. ஆனால், தென்கொரிய அரசின் துரித நடவடிக்கை, தேடிச்சென்று பரிசோதனை என்று பல திட்டத்தின் மூலம் தென் கொரிய அரசு, கொரோனா பரவலை வெகுவாக குறைத்துள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் குணமாகி வீடு திரும்பிய 91 பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள அந்நாட்டின் நோய்த் தடுப்பு பிரிவு இயக்குனர் ஜியாங் கூறுகையில், இவர்கள் அனைவர்க்கும் வேறொருவர் மூலம் மீண்டும் கொரோனா தோற்று வந்திருக்க வாய்ப்பில்லை. மாறாக இவர்கள் உடலில் ஏற்கனவே செயலாற்ற நிலையில் இருந்த ஒருசில கொரோனா வைரஸ் மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கலாம் என கூறியுள்ளார்.