மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானத்தின் கழிவறையில் பிறந்த குழந்தை!.. தான் கர்ப்பமாக இருந்ததையே அறியாத பெண்...!!
தான் கர்பமாக இருப்பதை அறியாமல், என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா தவித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.
ஈகுவடார் நாட்டின் குவாயாகில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் தமாரா என்கிற பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தார், ஆனால் அது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது. விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரை நெருங்கி கொண்டிருந்தது. அப்போது தமாராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி உண்டானது.
தமாரா வலியில் அலறி துடித்தார். இதை தொடர்ந்து, அவருக்கு அருகில் அமர்ந்து இருந்த மாக்சிமிலியானோ என்கிற பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார். மேலும் விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு நர்சும் உதவிக்கு சென்றனர். தனக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா துடித்துக கொண்டிருந்தபோது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்றெடுத்ததை நினைத்து தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார்.
தமாராவுக்கு குழந்தை பிறந்த விஷயம் தெரிந்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். இதை தொடர்ந்து விமானம் ஆம்ஸ்டர்டாம் நகர் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ பணியாளர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தயாராகவும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் தமாரா,பிரசவத்தின்போது தனக்கு பெரிதும் உதவிய சக பயணியான மாக்சிமிலியானோவின் பெயரை தனது குழந்தைக்கு சூட்டினார்