இளைஞரின் வயிற்றுக்குள் இருந்த முழு ஓட்கா பாட்டில்; அறுவை சிகிச்சை செய்து அகற்றிய மருத்துவர்கள்..!

நேபாளத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஓட்கா பாட்டிலை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
நேபாளத்தின் ரவுதஹத் மாவட்டம், குஜாரா நகரை சேர்ந்த நூர்சாத் மன்சூரி (26) என்ற இளைஞர், கடந்த சில தினங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.
பரிசோதனையில் அவரது அடிவயிற்றில் ஓட்கா மது பாட்டில் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து மருத்துவர்கள் ஆபரேசன் மூலம் அந்த பாட்டிலை அகற்றினர். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அவருக்கு ஆபரேசன் நடந்ததாகவும், இரண்டரை மணி நேரம் நடந்த இந்த ஆபரேசனில் பாட்டில் வெளியே எடுக்கப்பட்டதாகவும் ஹிமாலயன் டைம்ஸ் செய்தி வெளியட்டுள்ளது.
அந்த பாட்டில் அவரது குடலில் காயத்தை ஏற்படுத்தியதால் குடலில் வீக்கம் ஏற்பட்டதுடன், மலக் கசிவும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பாட்டிலை அகற்றியதால் அவர் அபாயகட்டத்தில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நூர்சாத் நண்பர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் சில நண்பர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
நண்பர்கள் சேர்ந்து மது அருந்தியபோது, போதையில் நூர்சாத்தின் ஆசனவாய் வழியாக பாட்டிலை வயிற்றுக்குள் செருகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாட்டில் உடையாமல் இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.