மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அது எப்படிப்பா !!! ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆன கூலித் தொழிலாளி...
நம் வாழ்க்கையில் எங்கு, எப்போது நமக்கு லக் அடிக்கும் என்று எவருக்கும் தெரியாது. ஜெர்மனியின் டாட்மண்டை சேர்ந்தவர் குர்ஷாட் இல்டிரிம். 41வயதான இவர் அங்குள்ள இரும்பு தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார். தனது அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு சிரமப்பட்டுள்ளார் இவர்.
இந்த நிலையில் தான் அவரது வாழ்க்கையில் ஒரு அதிர்ஷ்ட புயல் வீசி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 81 கோடி பரிசுத்தொகை கிடைத்துள்ளது. ஓவர் நைட் கோடீஸ்வரர் ஆன அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
உடனே இரும்பு தொழிற்சாலையில் பணிபுரிவதை விட்டுவிட்டார் குர்ஷாட். பின்பு சொகுசு கார்களை 5 கோடிக்கு வாங்கியுள்ளார். இப்படி தனக்குப் பிடித்த அனைத்தையும் வாங்கினாலும் கூட தன் வாழ்வில் தான் சிங்கிளாக இருப்பது வேதனை அளிப்பதாகவுள்ளது என்று கூறியுள்ளார்.
குர்ஷாட் அங்குள்ள ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் நான் இன்னும் சிங்கிளாகவே இருக்கின்றேன். மேலும் என்னை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஒரு பெண் தேவை என்றும், மேலும் என்னை அன்பு செய்யும் பெண் ஒருவரையே நான் விரும்பி தேடுகிறேன் என்று கூறினார்