#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..2000 க்கும் மேற்பட்டோர் பலி..!
தாலிபன்களின் வசமான ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அந்நாடே உருகுலைந்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்ட்டர் அளவுகோலில் 5.5 மற்றும் 6.3 பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் 6 கிராமங்கள் கடுமையான சேதத்தினை சந்தித்துள்ளது.
மேலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க உதவுமாறு தாலிபன்கள் உலக சுகாதார மையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இடைபாடுகளில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனங்களை உலக சுகாதார மையம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது.