மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு வேண்டியதை கொடு!,. இல்லன்னா செத்துடு!..கொடூர கணவனால் பரிதாபமாக உயிரிழந்த மனைவி..!
உத்தர பிரதேசம், பரியா கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சோத்பீர் சிங் சந்து (35). இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மந்தீப் கவுர் (30). இவர்களுக்கு 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் லாரி ஓட்டுனர் பணி கிடைத்ததால் ரஞ்சோத்பீர் சிங் சந்து தனது குடும்பத்தையும் அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே ரஞ்சோத்பீர் சிங் சந்து ஆண் குழந்தை இல்லாததால் பல வருடங்களாக தனது மனைவியை சித்திரவதை செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த மந்தீப் கவுர் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன் தற்கொலை செய்துகொண்டார். அந்த வீடியோவில், "என் கணவர் எனக்கு ஆண் குழந்தை இல்லாததால் தினமும் என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். இதற்கு மேல் இந்த கொடுமையை தாங்கும் சக்தி எனக்கு இல்லை. என் கணவரின் இந்த செயலுக்கு எனது மாமியாரும் உடந்தையாக இருப்பதுடன் அவரை தூண்டிவிடுகிறார்.
ஒவ்வொரு முறையும் குடித்து விட்டு என் கணவர் என்னை அடித்து காயப்படுத்தி வருகிறார். எனது நிலைகுறித்து கவலையடைந்த எனது தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையறிந்து என்னிடம் கெஞ்சி கூத்தாடி வாபஸ் வாங்க வைத்த என் கணவர், அவர் மீது புகார் அளித்ததற்காக என்னை 5 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தினார்.
இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவருக்கு சில பெண்களுடன் தகாத உறவும் உள்ளது. இருப்பினும் நான் அதை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தேன். இனியும் என்னால் முடியாது. நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். எனது இரண்டு மகள்களை மட்டும் யாராவது பார்த்துக்கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்த அவர், பின்னர் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலானது. இதனை அடுத்து ரஞ்சோத்பீர் சிங் சந்துவை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வசித்த குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளையும் ஆய்வு செய்து குற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அவரை காவல்துரையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே தற்கொலை செய்துகொண்ட மந்தீப் கவுரின் தந்தை, தனது பேத்திகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், தனது மகளின் உடலை தாயகத்திற்கு கொண்டு வர உதவ வேண்டும் என்றும் அமெரிக்க அரசு மற்றும் அங்குள்ள சீக்கிய சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.