மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரிஜினல் சிங்கப்பெண் நீதானாம்மா?.. சிங்கக்கூட்டத்துடன் அசால்ட்டாக வரும் பெண்மணி.. வைரல் வீடியோ.!
விலங்குகள் இயற்கையாகவே அதிக கூச்ச சுபாவம் கொண்டவை. ஏனெனில் அவை வளரும் வாழ்நாட்கள் மற்றும் வாழ்விடங்களில் அவைகளுக்கு வாழ்க்கை பயிற்றுவிக்கும் பாடம் அவ்வாறு அமைகிறது. ஆனால், மனிதர்களை விட அதிக பாசத்தை பாரபட்சமின்றி வைப்பவை என்பதும் மறுக்க இயலாதது.
விலங்குகளை பொறுத்த வரையில் அவை பசித்தால் மட்டுமே வேட்டையாடி சாப்பிடும். பசி இல்லை என்றால் அருகில் அவற்றுக்கு பிடித்த உணவு உட்கார்ந்து இருந்தாலும், அதனை சீண்டாது. சில நேரங்களில் அவைகளின் மூர்க்கத்தனம் காரணமாக பல உயிரிழப்புகளும் நடக்கிறது. அவை மனிதரின் அலட்சியத்தாலும், அவர்களால் பாதிக்கப்பட்ட விலங்குகள் கர்மாவை தனக்கு தெரிந்த வகையில் செய்கிறது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆப்ரிக்காவில் உள்ள வனப்பகுதியில், பெண்மணி சிங்க கூட்டத்துடன் நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், பெண்மணி சிங்கத்தின் வாளினை பிடித்து விளையாடியவாறு வருகிறார். சிங்கக்கூட்டம் அமைதியாக தனது பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது.
பார்க்கவே ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ குறித்து தெரியவந்துள்ள தகவலில், சம்பந்தப்பட்ட பெண்மணி உள்ளூர் வாசி கிடையாது. அவர் சுற்றுலாவுக்காக தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு வந்து சென்றுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.