அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
பயணிகள் பேருந்து மீது மோதிய சரக்கு லாரி..! 32 பேர் பரிதாப பலி.! 77 பேர் படுகாயம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!
சிரியாவில் டமாஸ்கசில் இருந்து ஹோம்ஸ் பகுதியை நோக்கி எரிபொருள் நிரம்பிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. எரிபொருள் நிரம்பிய லாரி திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வந்த இரண்டு மிக பெரிய பயணிகள் பேருந்துகள் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதனை தொடர்ந்து வந்த 15 வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஈராக் நாட்டை சேர்ந்த பயணிகள் உள்பட 32 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 77 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்துக்குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிரியா விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மீட்புக்குழுவினர். இச்சம்பவம் சிரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Road accident involving 2 buses, fuel truck kills 30 people in Syria - reports https://t.co/6SWkOQ2oFI
— Sputnik (@SputnikInt) March 8, 2020