மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு.. தொழுகையில் ஈடுபட்ட 30 பேர் உடல் சிதறி பலியான பரிதாபம்.!
ஷியா - சன்னி முஸ்லீம் பிரச்சனையில் தொழுகையின் போது குண்டு வெடித்து 30 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் ஷியா மற்றும் சன்னி முஸ்லீம் குழுக்கள் இடையே அவ்வப்போது பயங்கர மோதல் ஏற்படுவது வழக்கம். இதில், ஒருதரப்பினர் மற்றொரு தரப்பினரின் மசூதிக்குள் நுழைந்து குண்டுவீசி கொலை செய்வதும் தொடர்கதையாகியுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரில் அமைந்துள்ள மசூதியில் நேற்று தோகை நடைபெற்றது. அப்போது, மசூதிக்குள் இருந்து பயங்கர சப்தத்துடன் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. பலரும் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், சிலர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் 30 பேர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.