மீன் சாப்பிட ஆசையா?.. 40 வயது பெண்ணின் கை-கால்கள் அகற்றம்.. மக்களே உஷார்.!



America California Women Hand Leg removed 

 

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை சேர்ந்த பெண்மணி லாரா பராஜஸ் (வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, சான் ஜோஸிஸ் நகர சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மீன் வாங்கி சமைத்து சாப்பிட்டு இருக்கிறார். 

மீனை சாப்பிட்ட லாராவுக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்படவே, அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்ட்டுள்ளார். அங்கு சிகிச்சையின்போதே லாராவின் கை-கால்கள் செயலிழந்துள்ளது. 

தீவிரத்தன்மையை உணர்ந்த மருத்துவர்கள் உடனடியாக சோதனை முடிவுகளை தெரிந்துகொண்டு அவரின் கை-கால்களை வெட்டி அகற்றினர். விசாரணையில், லாரா சந்தையில் வாங்கி சாப்பிட்ட மீனை சரிவர சமைக்காமல் சாப்பிட்டு இருக்கிறார். 

இதனால் அவரின் கை-கால் விரல்கள், உதடு ஆகியவை கருப்பு நிறத்தில் மாறி இருக்கின்றன. சிறுநீரகம் செயலிழந்து கோமாவுக்கு சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து கை-கால்கள் முற்றிலும் செயலிழந்ததால் அகற்றப்பட்டன. 

இவர் ப்ரஜாஸ், விப்ரியோ வல்நிபிகாசால் எனப்படும் பாக்டீரியா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வகை தொற்று மீனை சரிவர சமைக்காமல் சாப்பிடுவதால் ஏற்படும் தொற்று ஆகும். 

கெட்டுப்போன உணவை சமைத்து சாப்பிடுவது, பச்சையான கடல் உணவுகளை சரிவர சமைக்காமல் சாப்பிடுவது இவ்வகை நோய்தொற்றுக்கு வழிவகை செய்யும். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக கொண்டவர்களை மரணம் வரை அழைத்து செல்லும் உயிர்கொல்லி நோய் எனவும் மருத்துவர்கள் தங்களின் எச்சரிக்கையை தெரிவிக்கின்றனர்.