மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உலகளவில் பிரபலமான பாடகர் மரணம்.. கண்ணீரில் குடும்பத்தினர், ரசிகர்கள்.!
அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணம், டல்லஸ் நகரை சேர்ந்த பிரபல பாடகர் மைக்கேல் லீ அடய் (Michael Lee Aday) வயது 74. இவரை Meat Loaf என்று கூறினால் அனைவருக்கும் தெரியும். உலகளவில் ரசிகர்களை கொண்ட பாடகர், நடிகரில் இவரும் ஒருவர் ஆவார்.
இவர் பல்வேறு நேரலை இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் பாடல்கள் பாடி இருக்கிறார். கடந்த 1979 ஆம் வருடம் லேசில் என்பவரை திருமணம் செய்த மைக்கேல், அவரை விவாகரத்து செய்து 2001 ஆம் வருடத்தில் டெபோரா கில்லெஸ்பி என்பவரை திருமணம் செய்தார்.
மைக்கேல் லீ பாடிய I’d Do Anything for Love மற்றும் Two Out of Three Ain’t Bad போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமானவை ஆகும். கடந்த 1947 ஆம் வருடம் பிறந்த மைக்கேல், தனது 74 ஆவது வயதில் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு பிரச்சனையால் இயற்கையை எய்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.