கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்ட வரைவுக்கு ஆதரவு.. 61 மாடி கட்டிடத்தில் ஏறி பகீர் விழிப்புணர்வு.!
கருக்கலைப்பை குற்றமாக்கும் சட்டவரைவுக்கு ஆதரவளிக்கும் விதமாக ஸ்பைடர்மேன் போல், 61 மாடி கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க உச்சநீதிமன்றம் மக்களின் கருக்கலைப்பை குற்றமென சட்டவரைவு இயற்றி வருகிறது. இதுகுறித்து சட்டபூர்வமான தகவல் வெளியானதை கண்டித்து, அங்கு மக்கள் பலரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மேய்சன் டெய்சாம்ப்ஸ் என்ற 22 வயதுடைய கல்லூரி மாணவர், கருக்கலைப்பு நடத்துவதற்கு எதிரான தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு முயற்சியை செய்துள்ளார்.
அப்போது அவர் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள உயரமான கட்டிடமான சேல்ஸ்போர்ஸ் டவரில் ஸ்பைடர்மேன் போல ஏறியுள்ளார்.
இதனை கண்ட காவல்துறையினர் மாணவரை எச்சரித்தும், அவர் இதனைப் பொருட்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அந்த கட்டடத்தின் மேல் மாடி வரை ஏறியுள்ளார். இதனையடுத்து கோபமுற்ற காவல்துறையினர் மாணவரை 1070 அடி உயர கட்டிடத்தில் மாடியில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் இது குறித்து அவரிடம் விசாரித்த நிலையில், 'நிதி திரட்டுவதற்காக மட்டுமே நான் இவ்வாறு செய்தேன்' என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் 22 வயது மாணவர் ஒருவர், 1070 மாடி கட்டடத்தில் தனியாக ஏறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.