சம்பளத்தை வெளிப்படையாக கூறி, ஒரே ட்விட்டில் உலக பிரபலமான பெண் செய்தியாளர்.. #ShareYourSalary.!



America NewYork Based The Points Gain Media Journalist Tweet about Salary

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த பெண்மணி விக்டோரியா வாக்கர். இவர் தற்போது நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். அந்நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பத்திரிகையில், மூத்த நிருபராக விக்டோரியா வாக்கர் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்து கொண்டதாக ட்விட்டரில் பதிவு செய்த நிலையில், அந்த பணிக்காக விண்ணப்பிப்போர் கூடுதலாக சம்பளம் கேட்குமாறு ட்விட் பதிவிட்டு, தனது பத்திரிகை நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.

அவரின் ட்விட்டர் பதிவில், "எனது சம்பளம் குறித்து கூறுவதை மறைக்க வேண்டாம் என நினைக்கிறன். மூத்த நிருபர் என்ற முறையில், எனது வேலைக்கு நீங்கள் விண்ணப்பித்தால், நீங்கள் நியூயார்க் நகருக்கு பணிக்காக குடிபெயர்ந்தால் $115,000 (இந்திய மதிப்பில் ரூ.85,88,493) சம்பளம் கேளுங்கள். நான் வாங்கிய ஊதியத்தை விட, நீங்கள் $8,000 (இந்திய மதிப்பில் ரூ.5,97,600) அதிகம் கேளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சக்தி வாய்ந்த பல நிறுவனங்களிடம் இருந்து நாம் சரியான ஊதியத்தை பெற இயலாது. நாம் ஊதியம் குறைந்தபட்சம் எவ்வுளவு கொடுக்கப்படும் என்று தெரிந்தால் மட்டுமே அவற்றை பெற இயலும். ஆகையால் எனது சம்பளத்தை நான் தெரிவித்துள்ளேன். இதில் ஒளிவு மறைக்கவுக்கு இடமில்லை #ShareYourSalary" என்று தெரிவித்துள்ளார்.