காதலியின் வினோத பரிசும், வில்லங்க சர்ப்ரைஸும்.. நீ சந்தோசமா இருந்தெல்ல., அப்ப நானும்...!

அமெரிக்காவை சார்ந்த OnlyFans மாடல் அழகியாக இருப்பவர் கஜோமி (வயது 24). இவர் தான் சார்ந்த மாடலிங் துறையில் பிசியாக இருந்து வந்ததால், தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்தாலும், அவரிடம் அன்பு காண்பிக்க முடியவில்லை, உல்லாசமாக இருக்க நேரமில்லை என்று வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.
இதனையடுத்து, தனது நண்பனுக்கு வித்தியாசமான கிறிஸ்துமஸ் பரிசு வழங்க திட்டமிட்ட கஜோமி (Kazumi), மற்றொரு பெண்ணுடன் ஆண் நண்பர் உல்லாசமாக இருக்க வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். ஆண் நண்பரிடமும் இதுகுறித்து கேட்கையில், கரும்பும் கொடுத்து, தின்ன கூலியும் யார் கொடுப்பார்? என்று எண்ணி உடனே சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நெவாடா மாநிலத்தில் விபச்சார தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என்ற காரணத்தால், ஆண் நண்பரை நெவேடா அழைத்து சென்ற கஜோமி, 30 நிமிடம் பாலியல் தொழிலாளியுடன் உல்லாசமாக இருக்கவும் அனுமதி வழங்கியுள்ளார். தனது நண்பரை திருப்திப்படுத்த இன்னும் சௌகரியமான வாய்ப்பினையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
தோழியின் ஆசைக்கு இங்க பாலியல் தொழிலாளியுடன் 30 நிமிடம் உல்லாசமாக இருந்த ஆண் நண்பரும், மீண்டும் திரும்பி வந்துள்ளார். இதுகுறித்து மாடல் அழகி கஜோமி தெரிவிக்கையில், "நான் எனது வேலையில் பிசியாக இருக்கிறேன். இதனால் எனது நண்பருக்கு மகிழ்ச்சி தேவை என்று புரிந்துகொண்டேன். எனது நண்பர் சப்போர்ட் பார்ட்னர்.
நாங்கள் நல்லமுறையில் நெருக்கமாக இருந்தாலும், அதனையும் தாண்டி அதிக மகிழ்ச்சியை அளிக்க விரும்பி பாலியல் தொழிலாளியுடன் நண்பர் உடலுறவு வைக்க அனுமதி வழங்கினேன். நான் பாலியல் தொழிலாளி உலகில் ஆர்வத்துடன் இருப்பவர். நமது விருப்பத்தை சட்டபூர்வமான இடத்தில் செய்வதில் என்ன தவறு?.
சமைக்க தெரியாத காரணத்தால் ரெஸ்டாரண்ட் சென்று சாப்பிடுகிறோம். அதனைப்போல தான் இதுவும். இப்போது, எனது மகிழ்ச்சிக்காக வேறொரு ஆணைக்கோட தேடி வருகிறேன். நான் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு போல, இது ஆண் நண்பருக்கு சர்ப்ரைஸியாக இருக்கலாம். அல்லது அவர் எனக்கு அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.