53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
பிரபல தாதா லாரன்ஸ் பீஷ்னோய் சகோதரர் அன்மோல் கைது?..
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா பகுதியைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ பாபா சித்திக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மேலும், நடிகர் சல்மான் கானுக்கு சமீபகாலமாக பிரபல தாதா லாரன்ஸ் பீஷ்னோய் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அவரின் வீட்டில் துப்பாக்கிசூடு தொடர்பான சம்பவமும் நடைபெற்றது.
இதனிடையே, சித்திக் கொலை வழக்கில், லாரன்ஸின் சகோதரர் அன்மோல் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், சல்மானுக்கு தொடர் மிரட்டல் விடுக்கப்பட்ட வழக்கிலும், அவர் குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: வாக்குவாதத்தில் விபரீதம்; கோடரியால் தந்தையை கொடூரமாக கொன்ற 33 வயது மகள்.!
அமெரிக்காவில் கைது என தகவல்
இந்நிலையில், அன்மோல் பீஷ்னோய் தேடப்படும் குற்றவாளியாக என்ஐஏ சார்பில் அறிவிக்கப்பட்டு, அவர் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 இலட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா காவல்துறையால் அன்மோல் பீஷ்னோய் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், இந்திய அரசு அமெரிக்க அரசிடம் அன்மோல் பீஷ்னோயை ஒப்படைக்க கோரிக்கை வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 13 வயது சிறுவனை பள்ளியில் வைத்து சீரழித்த 43 வயது ஆசிரியை; அதிர்ச்சியில் பெற்றோர்.!