மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கலப்பட போதைப்பொருளால் 20 பேர் அடுத்தடுத்து மரணம்.. 70 பேர் உயிர் ஊசல்.. அர்ஜென்டினாவில் பகீர் சம்பவம்.!
மேலை நாடுகளை போல இந்தியாவிலும் போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டு வர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அர்ஜென்டினா நாட்டில் உள்ள 8 மாகாணத்தில், கலப்பட கோகைன் விற்பனை செய்த காரணத்தால், அதனை பயன்படுத்தியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் கலப்பட போதைப்பொருளை உபயோகம் செய்தவர்கள் 20 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும், 74 பேர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் விற்பனை போட்டியில், ஒரு கும்பல் கோக்கைனுடன் பெயர் தெரியாத பொருளை சேர்த்து விற்பனை செய்ததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சட்டவிரோதமாக போதைப்பொருளை யாரும் வாங்கி உபயோகம் செய்ய வேண்டாம் என்றும் அந்நாட்டு அரசு மக்களை எச்சரித்து இருக்கிறது.