மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கனவில் வந்த லாட்டரி எண்ணிற்கு 5 கோடி பரிசு விழுந்த அதிசயம்.! 15 வருடங்களுக்கு பிறகு கோடிஸ்வரியான பெண்.! அதிசய சம்பவம்.!
15 வருடங்களுக்கு முன் கனவில் வந்த லாட்டரி சீட்டு எண்ணிற்கு தற்போது பரிசு கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குன்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஒரு கனவு கண்டுள்ளார். சில லாட்டரி சீட்டு எண்கள் அந்த கனவில் வந்துள்ளது. அந்த எண்களை குறித்துவைத்துக்கொண்ட அந்த பெண் அதில் இருந்து கடந்த 15 வருடங்களாக தனது கனவில் வந்த எண்ணை கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கிவந்துள்ளார்.
வழக்கம்போல் கடந்த வாரமும் அதே எண்களுடைய லாட்டரி சீட்டை அந்த பெண் வாங்கியுள்ளார். தற்போது அந்த லாட்டரி சீட்டிற்கு ஏழு லட்சம் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்துள்ளது. அதாவது, இந்திய மதிப்பில் சுமார் 5 கோடிக்கும் அதிகம்.
இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண், இந்த எண் எனது கனவில் வந்ததில் இருந்து அதே எண்களை கொண்ட லாட்டரி சீட்டுகளை வாங்கியதாகவும், ஒருமுறை கூட அந்த எண் தன்னை ஏமாற்றவில்லை என்றும், குறைந்தபட்ச பரிசுத்தொகையாவது கிடைத்துவிடும் எனவும், தற்போது அதிகபட்ச பரிசுத்தொகை கிடைத்துள்ளது மிகவும் காகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.